ஹைட்ரஜன் ஹீலியம் கலந்த தூசுகளில் தான் நட்சத்திரங்களும் கிரகங்களும் பிறந்தன. இத்தூசி கூட்டத்தில் மிகவும் பிரகாசமாயிருக்கும் நட்சத்திரம், நமது சூரியனைக் காட்டிலும் 1,00,000 மடங்கு அதிக பிரகாசமாகவும் எட்டு மடங்குக்குமேல் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கிறது. இவற்றின் கதிர்வீச்சு ஏற்கெனவே நெபுலாவில் குறைவான செறிவுள்ள பகுதிகளை அரித்துவிட்டிருக்கிறது. ஃபோடோ இவாப்பரேஷன் என அழைக்கப்படும் இந்தச் செயல் கரைந்துபோகும் வாயுவானது, வாயு-மற்றும்-தூசியின் தூண்களிலிருந்துஎழும்பும் நீராவிபோல் புகைப்படங்களில்காட்சியளிக்கிறது.இத் தூசு கூட்டத்தின் மறைவில் பிரமாண்ட சூரியன் ஒழிந்து கிடப்பதால் ஒளி வெளியே பாய்ந்து செல்வதற்கு, அதைச் சுற்றியுள்ள தூசி போதுமானளவு அகற்றப்பட வேண்டும். எனினும், அதனையும் மீறி ஒளி வீசும் அளவிற்கு அந்த சூரியன் இன்னும் பெரியதாகாவிட்டால், அது வெறுமனே ப்ரௌன் டுவார்ஃப் என அறியப்பட்டிருக்கும் இருண்ட வாயு பந்தாக ஆகிவிடும்.இந்தக்கழுகு நெபுலாவிலிருக்கும் தூசி மேகங்கள், புயல் வீசும் நாட்களில் காணப்படும் இடிமேகங்களைப் போன்றே இருப்பதால், அத்தூசிமேகங்களொன்றும் அந்தளவுக்கு பெரியவையல்ல என்று நினைத்த...