Quasar குவாஸர்
யதேச்சயாய் அலைவாங்கியைத் (ஆண்டெனா) திருப்பியபோது பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள சக்தியைக் கண்டறிந்தனர். ஆச்சரியம்! இது என்னதெனப் புரியவில்லை அவர்களுக்கு. பல நூறு கோடி ஒளிவருடங்கள் தொலைவிலிருந்து அந்த சக்தி வந்து கொண்டிருந்தது. நமதுசூரியன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களின் மீதும் அது பரவியிருந்தது.இதில் இன்னுமொரு ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவெனில் இந்த ஒளிவரும் மூலம் ஒளியின் வேகத்தைப் போல மூன்று மடங்கு வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருக்கிறது. ம்.... உண்மையிலேயே அற்புதம்தான். ஒளியானது அதன் மூலத்திலிருந்துகிளம்பி நம்மை அடைய பல நூறு கோடி வருடம் ஆகிறது எனும்போது, அதாவது நமக்கு இப்போது கிடைக்கும் இந்த குவாலர்களின் தகவல்களை ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் முடிவானது. பல நூறு கோடி ஒளியாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓர் நிகழ்வின் முடிவாகும். கிட்டத்தட்ட கால இயந்திரத்தின் (டைம் மெஷின்) பயணம் போன்றது இது.
இதன் மூலம் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலகட்டத்தினை அறிந்திடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இந்தக் குவாஸர்களிலிருந்து வரும் ஒளியானது நமது சூரியனைப் போல பத்து இலட்சம் கோடி சக்தி வாய்ந்தது. சரி, எங்கிருந்து வருகிறது இது. நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் ஒவ்வொரு அண்டத்தின் நடுவிலும் ஓர் மிகப் பெரிய கருந்துளை இருக்கிறதென, அந்தக் கருந்துளையில்தான் இந்த குவாஸர்கள் இருக்கின்றன. கருந்துளையிலிருந்து ஒளி உட்பட எதுவும் வெளியேறாதெனப் படித்திருக்கிறோம்.
ஆனால் குவாஸர்களின் இருப்பிடத்தை எப்படி உணர்ந்தார்கள் எனத் தெரியவில்லை. சந்தேகம்தான் அறிதலின் அடிப்படை. எனவே சந்தேகப்படுவோம்குவாஸர்கள் மிகப் பெரியவை. நமது அண்டத்தைவிடப் பெரியவை. இன்னும் சொல்லப்போனால் ஒரு கிலோபார்செக் அகலமுடையவை. (ஒரு கிராம் பார்செக் = 3.26 ஒளியாண்டுகள்).கருந்துளை தனது அண்டத்திலுள்ள அனைத்து விண்மீன்களையும்தன்னை நோக்கி சுழற்றி இழுக்கின்றன. இவை அனைத்தின் ஒளியும் கருந்துளையிலுள்ள மையத்தை அடைகின்றன.
எனவேதான் அவை மிகப்பிரகாசமாக இருக்கின்றன. வெற்றுக் கண்களுக்குப் புலனாவதில்லை. வானியல் தொலைநோக்கிகள் மூலம் இவை உணரப்படுகின்றன.குவாஸர்களின் சக்தியை கொஞ்சம் ஒப்பிடுவோம். குவாஸர் ஒரு வினாடியில் வெளியிடும் சக்தியை ஒட்டுமொத்த பூமியின் மின்சக்தியாக நூறு கோடி ஆண்டுகள் உபயோகிக்கலாம்.சுருக்கமாக நமக்குத் தெரிந்த மொழியில் சொன்னால் குவாஸர்கள் என்பவை ராட்சசன்கள். இதுவரை 12,000 குவாஸர்களை கண்டுபிடித்துள்ளனர். நமது தொலைநோக்கியின் தரம் அதிகரிக்க அதிகரிக்க இந்த எண்ணிக்கையும் கூடும். இத்தகையை குவாஸர்கள் பற்றி அதிகத் தகவல்கள் தெரியாதபோதும் இவற்றின் ஆயுட்காலம் சிலகோடி வருடங்கள் எனக் கணித்துள்ளனர். இந்தக் குவாஸரை விட அதிக கதிர் அலைநீளமுடையவற்றை 'ப்ளேஸர்கள்' என்கின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் மிகத் தொடக்க காலத்தில் இருக்கின்றன. வரும் காலங்களில் க்வேஸர்கள் மற்றும் ப்ளேஸர்கள் பற்றி அதிகத் தகவல்கள் தெரியவரும்.
Comments
Post a Comment