பிரபஞ்ஞத்தின் தூண்கள்
ஃபோடோ இவாப்பரேஷன் என அழைக்கப்படும் இந்தச் செயல் கரைந்துபோகும் வாயுவானது, வாயு-மற்றும்-தூசியின் தூண்களிலிருந்துஎழும்பும் நீராவிபோல் புகைப்படங்களில்காட்சியளிக்கிறது.இத் தூசு கூட்டத்தின் மறைவில் பிரமாண்ட சூரியன் ஒழிந்து கிடப்பதால் ஒளி வெளியே பாய்ந்து செல்வதற்கு, அதைச் சுற்றியுள்ள தூசி போதுமானளவு அகற்றப்பட வேண்டும். எனினும், அதனையும் மீறி ஒளி வீசும் அளவிற்கு அந்த சூரியன் இன்னும் பெரியதாகாவிட்டால், அது வெறுமனே ப்ரௌன் டுவார்ஃப் என அறியப்பட்டிருக்கும் இருண்ட வாயு பந்தாக ஆகிவிடும்.இந்தக்கழுகு நெபுலாவிலிருக்கும் தூசி மேகங்கள், புயல் வீசும் நாட்களில் காணப்படும் இடிமேகங்களைப் போன்றே இருப்பதால், அத்தூசிமேகங்களொன்றும் அந்தளவுக்கு பெரியவையல்ல என்று நினைத்து நீங்கள் ஏமாந்துவிடலாம்.
உண்மையில், ஒவ்வொரு தூண்போன்ற மேகமும் அவ்வளவு நீளமாக இருப்பதன் காரணமாக ஒரு முனையில் திடீரென உருவாகும் ஒளி மறுமுனைக்குச் செல்வதற்கு கிட்டத்தட்ட பல வருடம் பயணம் செய்ய வேண்டும். மேலும், உருவத்திலுள்ள ஒவ்வொரு “சின்னஞ்சிறு” வளைவுகளும் நமது சூரிய மண்டலத்தின் அளவுக்கு ஒப்பாக இருக்கிறது. மேலும், இந்த நெபுலா அந்தளவுக்கு வெகுதொலைவில் இருப்பதன் காரணமாக, நொடிக்கு 2,99,792 கிலோமீட்டர்வேகத்தில் பயணம் செய்த அதன் ஒளி நம்மிடம் வந்துசேர சுமார் 7,000 வருடங்கள் எடுக்கிறது. அப்படியென்றால் நாம் கழுகு நெபுலாவை மனிதன் உண்டாக்கப்படுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் நோக்குகிறோம்.
Comments
Post a Comment