காமா கதிர்வீச்சு
காமா கதிர்வீச்சுமின்காந்த அலைகளிலேயே மிகவும் குறுகிய அலைநீளம் கொண்ட மின்காந்தஅலை காமா அலையாகும். இதன் அலைநீளம் பொதுவாக 10 பிக்கோமீட்டரை விடக் குறைவாகும். ஒரு பிக்கோமீட்டார் என்பது ஒரு மீட்டரில் ஒரு ட்ரில்லியனில் ஒரு பங்கு ஆகும்! இது பொதுவாக அணுவின் விட்டத்தைவிடக் குறைவான நீளமாகும்.மேலும் மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.காமா கதிர் வெடிப்புக்களே பிரபஞ்ச பிரமாண்ட பெருவெடிப்புக்குப்(big bang) பின்னர் பிரபஞ்சத்தில் உருவாகும் மிகவும் சக்தி வாய்ந்த நிகழ்வுகளாகும்.இவற்றின் சக்தி வெளியிட்டைப் பற்றி கூறவேண்டும் என்றால், சூரியன் தனது மொத்த ஆயுள்காலத்தில் எவ்வளவு சக்தியை வெளியிடுமோ, அதனை வெறும் பத்தே வினாடிகளில் இவை வெளியிடும்!விண்வெளியில் சூப்பர்நோவா, கருந்துளைகள், பல்சார் போன்றவையும் காமா கதிர்களை உருவாக்குகின்றன. பூமியில் அணுகுண்டு வெடிப்பு, மின்னல் மற்றும் கதிரியக்கம் ஆகிய செயற்பாடுகளில் காமா கதிர் வெளியிடப்படுகிறது.காமா வெடிப்பு நிகழும் போது 50 ஒளியாண்டுகள் தூரத்தில் மனிதன் இருந்தாலும் ஆவியாகிவிடுவான்...பெருமளவான கவனிக்கப்பட்ட காமா கதிர் வெடிப்புகள், சூப்பர்நோவா அல்லது ஹைப்பர்நோவா வெடிப்பில் இருந்து உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மிக வேகமாகச் சுழலும் பெரிய விண்மீன்கள் தங்கள் எரிபொருளை முடித்துவிட்டு,நியுட்ரான் விண்மீனாகவோ, அல்லது கருந்துளையாகவோ மாறும் வேளையில் இப்படியான சூப்பர்நோவா அல்லது ஹைப்பர்நோவா வெடிப்புகள் இடம்பெறுகிறது.பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் பல பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இடம்பெற்றவையாகும், மேலும் இவை பிரபஞ்சத்தில் இடம்பெறும் மிக அரிதான ஒரு நிகழ்வாகும். ஒரு விண்மீன் பேரடையில் தோராயமாக ஒரு மில்லியன் வருடங்களுக்கு சில நிகழ்வுகளே இடம்பெறும்.கீழே உள்ள படத்தில் 12.8 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் ஒரு புதிய கருந்துளை பிறக்கும் போது வெளியிடப்பட்ட காமா வெடிப்பை நீங்கள் பார்க்கலாம். நாசாவின் ஸ்விப்ட் செயற்கை கோள் பதிவுசெய்த படம் இது.
Comments
Post a Comment